கிழக்கு மாகாண வலயப்பாடசாலைகளில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிமேம்படுவதற்கும் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரிய தொழிற் சங்கங்களை அனுசரித்து சகல வலயக் கல்விப்பணிப்பாளர்களும் நடந்துகொள்ளவேண்டும்.இவ்வாறு உறுதியளித்தார் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.என்.ஏ.ஏ.புஸ்பகுமார.17.102014 அன்றுகிழக்கு மாகாணக் கல்வி அமைச்சில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உயர்மட்ட குழுவினருடனான சந்திப்பில் அவர்இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சனைகளை செயலாளரிடம் முன்வைத்தசங்கக் குழவினர் இவை உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட கல்வி அமைச்சுச் செயலாளர் முறைகேடாக நடந்துகொள்கின்ற கல்வி அதிகாரிகள் பற்றி எழுத்துமூலமாக தமக்கு அறியத் தந்தால் தான் உடனடியாக நடவடிக்கைஎடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அதனால் பாதிக்கப்படும் மாணவர்களின் கல்வி, ஆசிரியர்களுக்குவழங்கப்படவேண்டிய நிலுவைகள், பதவியுயர்வுகள், வழங்கப்படவேண்டிய கடனுதவி என்பன பற்றி விரிவாகஎடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதைவட பழிதீர்க்கும் நோக்கில் நடந்துகொள்கின்ற ஒரு கல்விப்பணிப்பாளரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீண்டநேரம் உரையாடப்பட்டதோடு அது தொடர்பில் தாம் வருத்தப்படுவதாகவும் அவரை அழைத்து தாம் விரிவாக அறிவுரை சொல்வதாகவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» கிழக்கு மாகாண வலயப்பாடசாலைகளில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும் நடவடிக்கை
கிழக்கு மாகாண வலயப்பாடசாலைகளில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும் நடவடிக்கை
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: