Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக அஞ்சலோ மெத்திவ்ஸ்

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் திறமை காட்டிய சகல துறை ஆட்டக்காரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியுஸ் உச்சத்தை தொட்டுள்ளார்.
இந்தத் தரவரிசைப் பட்டியலை றிலையன்ஸ் குழுமத்துடன் சேர்ந்து சர்வதேச கிரிக்கெட் பேரவை தொகுத்திருந்தது.

இலங்கை அணியின் இந்திய சுற்றுத்தொடரில் அஞ்சலோ மத்தியுஸ் 339 ஓட்டங்களை குவித்திருந்தார். 
அவரது ஆட்ட சராசரி 113 ஓட்டங்களாகும். அது மாத்திரமன்றி அவர் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
றிலையன்ஸ் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறந்த ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் தென்னாபிரிக்க வீரர் ஏ.பி.டி.வில்லியஸ் முதலிடம் பெற்றுள்ளார்.

Post a Comment

0 Comments