Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்தின் மேலாக வெள்ளம் - போக்குவரத்தில் சிரமம்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக சில தாழ் நில பிரதேசங்கள் வெள்ள நீரினால் மூழ்கி வீதி போக்குவரத்தும் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாவடிப்பள்ளி பாலத்தின் மேலாக வெள்ள நீர் பரவி பாய்ந்தோட ஆரம்பித்துள்ளமையினால், இவ்வீதிவளியாக வாகனங்கள் பயணிக்க சிரமபடுவதோடு, வீதிகள் மற்றும்  வயல் காணிகளிலெல்லாம் வெள்ள நீர் நிரம்பி பரவலாக காணப்படுகின்றது.

மேலும் தொடர்ந்தும் மழை பெய்தால் பாய்ந்தோடும் வெள்ள நீரோட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்கப்படுவதுடன், கடந்த கால வெள்ளத்தின் போது வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதனைப் போன்ற நிலை ஏற்பட வாய்ப்பெற்படலாமெனவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.









Post a Comment

0 Comments