Home » » மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் பெரு மழை காரணமாக மட்டக்களப்பு வாவியின் மட்டம் உயர்வடைந்து பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

மேலும் போக்குவரத்தும் பாதிப்படைந்து காணப்படுகின்றது.

அத்துடன் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் நிலையம் வாவிக்கு அருகில் இருப்பதன் காரணமாக அவையும் மூழ்கும் ஆபத்துகள் ஏற்பட்டுள்ளன.



மட்டக்களப்பு அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முகத்துவாரத்தை வெட்டி விடுமாறு பணித்தார்.



இதற்கிணங்க இன்று மாலை 4.00 மணிக்கு பாலமீன்மடு முகத்துவாரம் வெட்டப்பட்டு ஆற்று நீர் கடலைநோக்கிப் பாய்வதாக  மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் தெரிவித்தார்.










Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |