Home » » மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை விவகாரம் – மகிந்தவுடன் பேசுவார் மோடி!

மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை விவகாரம் – மகிந்தவுடன் பேசுவார் மோடி!

தமிழக மீனவர்களுக்கு கொழும்பு நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடுவார் என்று இந்திய அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் உடனடியான தீர்வை காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டமுறைப்படி 1976ஆம் ஆண்டு முதல் மரணதண்டனை நிறைவேற்றம் மேற்கொள்ளப்படுவதில்லை.எனினும் இந்திய மீனவர்களின் நிலை தொடர்பில் இந்தியா ஏற்கனவே சில முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, இந்திய அதிகாரிகள் ஏற்கனவே இலங்கையின் ஜனாதிபதி காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி காத்மண்டுவில் சார்க் மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போது மீனவர் மரணதண்டனை தொடர்பில் இந்திய பிரதமர், இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவார் என்று இந்திய அரசாங்கத்தரப்பு தெரிவித்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |