Home » » மீரியபெத்தவில் 75 குழந்தைகள் பெற்றோரை இழந்து நிர்க்கதி! – உறவினர்களிடம் ஒப்படைக்க மறுக்கிறது அரசாங்கம்.

மீரியபெத்தவில் 75 குழந்தைகள் பெற்றோரை இழந்து நிர்க்கதி! – உறவினர்களிடம் ஒப்படைக்க மறுக்கிறது அரசாங்கம்.

மீரியபெத்த மண்சரிவில், தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள் எக்காரணம் கொண்டும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படமாட்டார்கள் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அந்தப் பிள்ளைகளின் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் கடந்த சுனாமி அனர்த் தத்தின் போது பெற்ற அனுபவத்தைக் கொண்டே இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. இதுவரை கணக்கெடுப்பின் படி 75 பிள்ளைகள் தாயையும் தந்தையையும் இழந்து நிர்க்கதியாகி நிற்கின்றனர்.
இவர்களது உறவினர்கள் என்று சொல்வோரும், நெருங்கிய உறவினர்கள் என்று சொல்வோரும் இந்தப் பிள்ளைகளை கேட்கின்றனர். எனினும் அவர்களிடம் இப்பிள்ளைகளை ஒப்படைக்கப்படமாட்டார்கள். 75 பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு தங்குமிட வசதிகள் உள்ளிட்ட எதிர்காலம் அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்பேற்கும். எவரது அனுசரணையையும் பெற்றுக் கொடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. எனினும் இந்தப் பிள்ளைகளுக்காக உதவி வழங்க விரும்புகிறவர்கள் வழங்க முடியும்.
53 வீடுகளிலுள்ள சுமார் 330 பேர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் எடுக்கும் சரியான தரவுகளை கூற முடியவில்லை என தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |