Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் அஜீத்: இயக்குநர் முருகதாஸ் நெகிழ்ச்சி பேட்டி

சென்னை: நடிகர் அஜீத்குமார் மூலமாக தனக்கு வாழ்க்கை கிடைத்ததாக முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார். நேற்றிரவு விஜய் டிவியின் 'காபி வித் டிடி' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முருகதாஸ் கலந்துகொண்டார். அப்போது புகைப்படங்களை பார்த்து கருத்து சொல்லும் ரவுண்டில், அஜீத்-முருகதாஸ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தொகுப்பாளர் திவ்யதர்ஷினி காண்பித்தார். அப்போது அஜீத் குறித்து முருகதாஸ் கூறியதாவது: நான் அசிஸ்டெண்ட் இயக்குநராக இருந்த காலகட்டத்தில் ஒருநாள், தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, அஜீத்தை பார்த்துள்ளீர்களா என்று சக்கரவர்த்தி என்னிடம் கேட்டார். நான் பார்த்தது கிடையாது என்றேன். அப்போது அஜீத் இங்கேதான் உள்ளார். நான் உங்களை அவரிடம் அறிமுகம் செய்கிறேன், ஒரு ஹலோ சொல்லிவிட்டு போய்விடுங்கள் என்று சக்கரவர்த்தி கூறினார். நானும் சரி என்றேன். கதவை திறந்ததும் அஜீத் எதிர்ப்பட்டார். என்னை பார்த்ததுமே 'He will make it'என்று கூறினார். இரண்டே செகண்ட்தான் என்னை பார்த்திருப்பார், ஆனால் அதற்குள்ளாகவே, என்னைபார்த்து நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என்று கூறியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இவரால் நல்ல படம் பண்ண முடியும் என்றும் என்னைப்பார்த்து அஜீத் தெரிவித்தார். இதற்காக அஜீத்துக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு நான் எனது வேலைகளை பார்க்க கிளம்பினேன். காலம் கடந்தது. அஜீத் சார் மூலமாகவே எனக்கு ஒரு லைஃப் கிடைத்தது. அவருடன்தான் நான் எனது முதல் படத்தை (தீனா) இயக்கினேன். இவ்வாறு அஜீத் குறித்து, நன்றி மறக்காமல் முருகதாஸ் பேட்டியளித்தார். அதே நேரம், விஜய் குறித்து கேட்டபோது, சூட்டிங்கில் படு பயங்கரமாக வேலை பார்க்கும் விஜய், பிற நேரங்களில் அமைதியான பிள்ளையாக காட்சியளிப்பார். இந்த இரண்டில் எது நடிப்பு என்று நான் விஜயிடம் விளையாட்டாக கேட்டதுண்டு. கத்தி கிளைமாக்ஸ்சில் விஜய் பேசும் வசனங்களைப்போன்று, பொது மேடையிலும் அவர் பேச வேண்டும் என்பது எனது ஆசை என்ற முருகதாஸ், ஹீரோயின்களில், தனக்கு, சமந்தா 'Sweet Heart' என்றும் குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments