Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உங்க ராசிக்கு எந்த ராசிக்காரர்கள் பொருத்தமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

ராசி என்பது நீங்கள் பிறந்த நேரத்தில் சூரியனின் நிலையை பொறுத்து அமைவது. ஒருவரின் மன உறுதி
மற்றும் தனித்துவத்தை ஆளுமை செய்வது சூரியனே. ஒருவர் தன் வாழ்நாளில் எப்படி ஜொலிக்க போகிறார் என்பதை கணிக்கும் அதிமுக்கிய காரணியாக விளங்குவது இந்த சூரியனின் நிலை தான். நீங்கள் எப்படிப்பட்டவர், உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்ள உங்கள் ராசி உதவும். கல்வி, தொழில், ஏன் உங்கள் காதல் வாழ்வில் கூட நீங்கள் வெற்றியடைவீர்களா அல்லது தோல்வியை காண்பீர்களா என்பதை கணிக்க உங்கள் ராசி பலன் முக்கிய பங்கை வகிக்கிறது.

நீங்களும் உங்கள் துணையும் பல வகையில் இணக்கத்துடன் இருக்கலாம். ஆனால் ஜோசியப்படி உங்களுக்குள் பொருத்தம் இல்லையென்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் எந்த ராசிக்கார்கள் உங்களுக்கு துணையாக வந்தால் உங்களுக்கு பொருந்தும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
astro mesham


இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் மிகப்பெரிய இலட்சியவாதிகளாக இருப்பார்கள். தங்கள் தொழில் வாழ்க்கையிலும் அவர்கள் மூழ்கியிருப்பார்கள். தங்கள் மீது அதிக அன்பை செலுத்துபவர்களை புறக்கணிக்கவும் செய்வார்கள். மாற்றத்தை விரும்பும் அவர்கள் அவநம்பிக்கைக்கு அதிகமாக உள்ளாவார்கள். மேஷ ராசிக்காரர்கள் காதல் உணர்ச்சி உள்ளவர்கள் என்றாலும் கூட, நீண்ட கால உறவின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. மேஷ ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு மற்றும் கும்பம். அவர்களுக்கு பொருந்தாத ராசிகள் – கடகம், கன்னி மற்றும் மகரம்.
astro rishapam
ரிஷப ராசிக்காரர்கள் எல்லாம் நிலையாக, நம்பகமான மற்றும் பழமைவாத நபர்களாக இருப்பார்கள். குடும்ப கணக்குகளை ரிஷப ராசிக்காரர்கள் நிலையாக வைத்திட முயற்சி செய்வார்கள். ஆனால் நிதி நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லும் போது அவர்கள் பைத்தியம் பிடித்ததை போல் ஆவார்கள். சோதனை முயற்சிகள் அல்லது வீட்டை விட்டு தொலைவாக இருப்பதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ரிஷப ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம். ரிஷப ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – சிம்மம், தனுசு மற்றும் கும்பம்.
astro mithunam
துணையின் தேவைக்கேற்ப தங்களின் தேவைகளை சுலபமாக மாற்றிக் கொள்ளும் குணத்தை கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள். அவர்களை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டமாகும். ஆளுமை அறிகுறிகளுடன் விளங்கும் மிகச்சிறந்த துணையாக அவர்கள் இருந்தாலும் ஒரு பாதையை தேர்ந்தெடுக்க இவர்களின் உதவியை நாடும் துணையுடன் இவர்கள் தோற்று போவார்கள். மிதுன ராசிக்காரர்களின் தவறை அவர்களை உணர வைக்க வேண்டுமானால், நீங்கள் அப்பட்டமாக நடந்து கொள்ள வேண்டும். மிதுன ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – துலாம், மேஷம், சிம்மம் மற்றும் கும்பம். மிதுன ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – விருச்சிகம், மகரம் மற்றும் மீனம்
astro kadakam
காதல் உணர்வுடன் கூடியவர்களான கடக ராசிக்காரர்கள் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். கடக ராசிக்காரரான உங்கள் துணை லேசாக காயமடைந்தாலும் சரி, தங்கள் வாழ்க்கையில் இருந்து உங்களை தூக்கி எரிய தயங்க மாட்டார்கள். ஆனாலும் சிறிது காலம் கழித்து, பிரச்சனை சுமூகமாக முடிந்த பிறகு நிலைமை சரியாகும். அதே நேரம் அவர்கள் கடுமையாகவும், உணர்ச்சி வயப்படுகிறவராகவும் இருப்பார்கள். கடக ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம். கடக ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், துலாம் மற்றும் தனுசு.
astro simmam
தீவிர அன்பான மற்றும் உண்மையான துணையாக விளங்குவார்கள் சிம்ம ராசிக்காரர்கள். ஆனால் அவர்களிடம் உள்ள மோசமான குணமே அவர்கள் சுயநலம் பிடித்தவர்களாக இருப்பார்கள். தங்கள் மேல் விழும் கவனத்தை விரும்புவார்கள், மிகப்பெரிய லட்சியவாதியாக இருப்பார்கள், வாழ்க்கையில் வெற்றியை ஈட்ட (சில நேரம் குடும்பத்தாரின் உதவியுடன்) எதையும் செய்வார்கள். தாங்கள் விரும்புபவர்களை விசேஷமாக உணர வைப்பார்கள். சிம்ம ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – துலாம், மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் தனுசு சிம்ம ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம். -
astro kanni
கன்னி ராசிக்காரர்கள் நம்பகமாக, வசீகரத்துடன், நடைமுறை குணத்தோடு இருப்பவர்கள். தங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருக்க உண்மையிலேயே விரும்புவார்கள். கன்னி ராசியை கொண்ட ஆண்கள் சற்று ஆண் தன்மையற்றவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த குணங்கள் தான் அவர்கள் மீது அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. கன்னி ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம். கன்னி ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், தனுசு மற்றும் கும்பம்.
astro thulaam
இந்த ராசி தராசை குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உள்ளது. துலாம் ராசிக்காரர்கள் நேர்மையுடனும், நடுநிலைமையுடனும் இருப்பார்கள். அவர்கள் தங்களை தாங்களே தியாகம் செய்பவர்கள். தங்கள் உறவுமுறைகளை அவர்கள் முடிவில்லா பொறுமையுடன் கையாளுவார்கள். கடலைப் போடுவதிலும் துலாம் ராசிக்காரர்கள் பெரியவர்கள். தங்கள் துணையுடன் விவாதத்தை வளர்ப்பதை விட, விட்டு கொடுத்து போய் விடுவார்கள். துலாம் ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம். துலாம் ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – கடகம், மகரம் மற்றும் மீனம்.
astro viruchchikam
உடலுறவுக்கு பெயர் பெற்றவர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். உடலுறவின் மீது தீவிர நாட்டமுடையவர்கள் இவர்கள். ஆனாலும் இவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பார்கள். இருப்பினும் அதனை வெளியே வெளிப்படுத்த மாட்டார்கள். ஆன்மீகத்திலும் நாட்டம் உடையவராக இருப்பார்கள். விருச்சிக ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – கடகம், கன்னி, மகரம் மற்றும் மீனம். விருச்சிக ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மிதுனம், சிம்மம் மற்றும் கும்பம்
astro thanusu
மிகவும் நேர்மறையானவர்களான தனுசு ராசிக்கார்கள் வாழ்க்கையின் மீது சுதந்திரமான பார்வையை கொண்டிருப்பார்கள். தங்கள் துணையின் நல்ல விஷயங்களை மட்டுமே அவர்கள் பார்ப்பார்கள். சுதந்திரமாக இருக்க விரும்பும் அவர்கள், தங்களை யாரேனும் கட்டுப்படுத்துவதை விரும்ப மாட்டார்கள். தனுசு ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், துலாம், சிம்மம் மற்றும் கும்பம். தனுசு ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், கடகம், கன்னி மற்றும் மீனம்.
astro makaram
கடுமையான மற்றும் பிரச்சனையில்லாத துணையாக விளங்குவார்கள் மகர ராசிக்காரர்கள். அவர்கள் சுலபத்தில் யாரையும் நம்பா விட்டாலும் கூட, ஒரு முறை நம்பிக்கை வைத்து விட்டால் வாழ்க்கை முழுவதும் அது தொடரும். தங்களை தங்கள் துணை விரும்புவதை, தங்கள் துணை தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டும் என விரும்புவார்கள். மகர ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கன்னி, மகரம் மற்றும் மீனம். மகர ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மேஷம், மிதுனம், சிம்மம் மற்றும் துலாம்
astro kumpam
தங்களுக்கும், தங்கள் துணைக்கும் உயரிய கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள் கும்ப ராசிக்காரர்கள். தங்கள் துணையை கவர்ந்திழுக்கும் ஈர்ப்புடைய தன்மையுடன் உடையவர்கள் இவர்கள். தங்கள் துணைக்கு அதிக நம்பிக்கையுடன் திகழ்வார்கள். கும்ப ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – மேஷம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு. கும்ப ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் கன்னி.
astro menam
தங்கள் உணர்ச்சிகளால் முழுமையாக ஆளப்படுபவர்கள் தான் மீன ராசிக்காரர்கள். சந்தேகமே இல்லாமல் அவர்கள் விசுவாசமாக, அன்பை அள்ளி வழங்குபவராக இருப்பார்கள். ஆனாலும் இவர்களை சுலபத்தை காயப்படுத்தி விடலாம் மற்றும் கோபப்படுத்தவும் செய்யலாம். மீன ராசிகாரர்களுக்கு பொருந்தும் ராசிகள் – ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மீனம். மீன ராசிகாரர்களுக்கு பொருந்தாத ராசிகள் – மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு

Post a Comment

0 Comments