கொழும்பில் வெள்ளவத்தை கடற்பரப்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை கடற்பரப்பில் உள்ள கற்பாறைகளுக்கிடையிலிருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments