நான்கு நாள் நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் இரண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. கப்பல் தலைவர் ஷஹீட் இல்யாஸ் தலைமையில் PNS NASR மற்றும் SAIF ஆகிய இரு கடற்படை கப்பல்களே இலங்கை வந்துள்ளன. பாகிஸ்தானின் SAIF கடற்படைக் கப்பல் சீனாவின் F22P போர்க்கப்பலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலானது கடல்சார்ந்த செயற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவீன ஆயுதங்கள், சென்சர் மற்றும் இயந்திரங்களைக் கொண்டதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.
|
![]() |
0 Comments