மட்/பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. வலயக்கல்வி அலுவலகத்தில் உள்ள கேட்போர் கூட மண்டபத்தில் கலை நிகழ்வுகளும் பூசையும் இடம்பெற்றன. சிறப்பு ஆன்மீக உரையை காந்தன் குருக்கள் ஐயா அவர்கள் ஆற்றினார். அதனைத் தொடர்ந்து மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மட்/களுதாவளை ம.வி மாணவர்களின் நடனம் பாடல்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகள் மு.ப 11.00 தொடக்கம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments