Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தின் டயர் வெடித்தது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமொன்றின் பின்புற டயர் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை 4.20 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. விபத்துக்குள்ளான சிறியரக விமானத்தில் மூவர் மாத்திரமே பயணித்தனர். இந்த விபத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. டயர் வெடித்து விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, புதிய டயர் பொருத்தப்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்னர் அந்த விமானம் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் மேலும் தெரிவித்தன.

Post a Comment

0 Comments