Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மீரியாபெத்த மண்சரிவு: மீட்புப்பணி இன்று மீண்டும் ஆரம்பம், எவரும் தப்ப வாய்ப்பில்லை, இந்தியா உதவத் தயார்!

பதுளை ஹல்துமுல்ல மீரியாபெத்தயில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். மீரியாபெத்த மண் சரிவில் சிக்குண்டவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம். மண் சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் நோக்கில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடும் மழை மற்றும் போதியளவு வெளிச்சம் இன்மையினால் மீட்புப் பணிகள் நேற்றுமாலை இடைநிறுத்தப்பட்டன.
இன்று மீண்டும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுமார் ஐந்து கிலோ மீற்றர் வரையிலான பகுதி முழுவதுமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 120 வீடுகள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொஸ்லாந்தை ஹல்துமுல்ல பிரதேசத்தை அண்டிய பத்து பாடசாலைகள் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் 300க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை எனவும், அவர்களில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பதுளை கொஸ்லாந்தை மீரியபெத்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸூடன் தொடர்பு கொண்டு இந்த தகவலை வழங்கியுள்ளார். இதன்போது இந்தியாவின் உதவிக்கு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இன்று பெரும்பாலும் இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு செல்வர் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது.



 

Post a Comment

0 Comments