Home » » ஐரோப்பாவில் தடைநீக்கப்பட்டாலும் புலிகளைத் தலையெடுக்க விடமாட்டோம்! – ஜனாதிபதி மஹிந்த சூளுரை.

ஐரோப்பாவில் தடைநீக்கப்பட்டாலும் புலிகளைத் தலையெடுக்க விடமாட்டோம்! – ஜனாதிபதி மஹிந்த சூளுரை.

ஐரோப்பிய யூனியன் எத்தகைய தீர்மானங்களை எடுத்தாலும் புலிகள் மீண்டும் தலைதூக்க அரசாங்கமும் படையினரும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோமரங்கடவெல பிரதேச சபைக் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நான்கு வருட ங்களுக்கு முன்பு இப்பிரதேசத்தின் நிலைமையை நான் புதிதாகக் கூறத் தேவையில்லை. 2009 ற்கு முன் இருளடைந்த யுகமொன்றே நாட்டில் இருந்தது.
.தற்போது நிலைமை முழுமையாக மாறியுள்ளது. எங்கும் எவரும் பயம் சந்தேகமின்றி பயணிக்கக்கூடிய வாழக்கூடிய சூழல் நாட்டில் தற்போது உருவாக்கப் பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதி இப்பிரதேசத்திற்கு இது போன்ற இரவு வேளையிலும் வந்துபோக முடிகின்றது. இந்த நிலைமையை உணர்ந்தோ அல்லது உணராதோ சிலர் குறுகிய அரசியல் இலாபத்திற்காக செயற்படுகின்றனர். கடந்த கால மோசமான நிலைமையை அறியாதவர்களாகவே அவர்கள் செயற்படுகின்றனர் என எம்மால் கருத முடிகிறது.
புலிகளுக்கான தடை உலக நாடுகள் எங்கும் விதிக்கப்பட்டிருந்ததை மக்கள் அறிவர். எனினும் அண்மையில் ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இத்தடையை நீக்கி புலிகள் மீள சுதந்திரமாக அந்நாடுகளில் செயற் வழிவகுத்துள்ளனர். அத்தோடு இலங்கையிலிருந்து மீன் கொள்வனவு செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளன. இச்செயற்பாடுகள் ஏதாவது காரணத்தோடுதான் மேற் கொள்ளப்பட்டது. எனினும் என்ன காரணம் என்று எமக்குப் புரியாமலுள்ளது. நீதிமன்ற விடயம் என்பதால் அது தொடர்பில் நாம் கருத்துக்கூற முடியாது.
எவ்வாறாயினும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க எமது படையினரும் அரசாங்கமும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |