Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நிவாரணம் சேகரிக்கும் பணி ஆரம்பம்


பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை, மீரியபெத்தைத் தோட்டப் பிரதேசங்களில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பகுதிகளிலும் இருந்து உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ச் செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து பாரிய நிவாரண சேகரிப்பு நடவடிக்கைகளை இன்று ஆரம்பித்தனர்.

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு வர்த்தகர்கள், பொதுமக்கள், சமூக சேவை நிறுவனங்கள் பாதிக்கப்படவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ. தவராஜா, மாவட்ட பிரதம கணக்காளர் எஸ். நேசராஜா, மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ் இன்பராஜன் , சிவில் சங்கத் தலைவர் எஸ் மாமாங்கராஜா, மட்டக்களப்பு வர்த்த கைத்தொழில் சம்மேளனத் தலைவர் எம். செல்வராஜா ஆகியோர் கலந்து கொண்டு பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிவாரண சேகரிப்பு பணிக்கு மட்டக்களப்பு மாநகரசபை பூரண உதவிகளை வழங்கிவருகின்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள்,பொதுமக்களின் இல்லங்களில் இருந்து பெருமளவான நிவாரணப்பொருட்கள் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக வழங்கப்பட்டுவருகின்றன.














Post a Comment

0 Comments