மட்டக்களப்பு, ஆரையம்பதி மண்முனை கோயில் குளம் (சிகரம்) பகுதியில் உலகம் போற்றும் கிழக்கின் முதலாவது சிற்றரசி உலகநாச்சியின் கோட்டையும், போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இடிபாடுகளும் தெல்பெருள் திணைக்களகத்தினால் அகழ்வாராச்சிக்கு உட்படுத்தப்படவுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாணசபை முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்களின் வழிகாட்டலில் முலம் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தனினால் சுமார் 3 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சியின் பயனாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கி.மு 312ம் நூற்றாண்டளவில் மண்முனையினை இராட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த முதலாவது பெண் சிற்றரசி உலகநாச்சியின் கோட்டையும் அவரால் அமைக்கப்பட்டு போர்த்துக்கீசரினால் உடைக்கப்பட்டகாசி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் எச்சங்களையும் அகழ்வாராச்சி மேற்கொள்ளதற்கான உத்தியோக பூர்வ கடிதத்தினை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவனுக்கு தெல்பொருள் திணைக்கத்தினால் அனுப்பி வைத்துள்ளது.
கடந்த ஒரு வருடமாக இப் பகுதியில் திட்டமிட்ட மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வந்ததும் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான இனமுறுகல்கள் ஏற்படுவதற்கும் குறித்த பிரதேசம் காரணமாக இருந்தது.
இப்பகுதி தெல்பெருள் திணைக்களகத்தின் முலம் ஆகழ்வாராச்சி மேற்கொள்ளப்பட்டு புனித பகுதியாக பிரகடனப்படுத்துமிடத்து இப் பகுதியில் சமானாதக்காற்று வீசும் எனவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.
0 Comments