களுத்துறை வலயக் கல்வி அதிகாரிகள் மட் /வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலைக்கு கடந்த வெள்ளிக்கிழமை (12.09.2014) விஜயம் செய்திருந்தனர்.
மட் /வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலைக்கு வருகை தந்த இவர்கள் பாடசாலையின் முகாமைத்துவக் குழுவை சந்தித்து கலந்துரையாடியதுடன் பாடசாலையைச் சுற்றி பார்வையிட்டதுடன் கல்வி நடவடிக்கைகள், நிர்வாக கட்டமைப்பு போன்ற விடயங்களை பார்வையிட்டதுடன் பாடசாலையின் கடந்தகால அறிக்கைகளை பார்வையிட்டு பாடசாலையின் சிறந்த செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
களுத்துறை கல்வி வலயத்திலிருந்து வருகை தந்திருந்த கல்வி அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கும்போது. தாம் இப்பாடசாலைக்கு வருகைதந்தமை மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிறந்த நிர்வாக நடைமுறைகளையும் கல்விச் செயற்பாடுகளையும் அறிய முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.
பாடசாலையின் அதிபர் திருமதி ஆர்.கனகசிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பாடசாலையின் முகாமைத்துவக் குழுவினருடனான சந்திப்பின்போது மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.க.பாஸ்கரன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

0 Comments