டெங்கு நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
களுவாஞ்சிகுடியில் நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு மாபெரும் சுத்திகரிப்பு மற்றும் சுகாதார பணிகள் இன்று காலை 09.00 மணியளவில் ஆரம்பமானது.
களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார திணைக்களமும் களுவாஞ்சிகுடி பொலிசார், விசேட அதிரடிப்படை, இராணுவமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தன.
இதன்போது நுளம்பு பெருக்கம் உள்ள இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டதுடன் டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களில் மருந்துகளும் தெளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த,பதில் பொறுப்பதிகாரி என்.ரி.;அபூபக்கர்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

0 Comments