|
குடியேற்றவாசிகளை தடுப்பு முகாம்களில் அடைக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் திட்டங்களை முடிவிற்கு கொண்டு வரக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அந்தநாட்டின் உயர்நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் அவுஸ்திரேலிய நடைமுறையை அவுஸ்ரேலிய உயர்நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கி உள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாங்கம் நிரந்தர விசாக்களை வழங்க மறுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.
|
மேலும் குடியேற்றவாசிகளை தடுத்துவைப்பதற்கான அரசமைப்பு எல்லைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. ஒருவருக்கு விசா வழங்குவதற்கும், அல்லது நிராகரிப்பதற்கும், அல்லது திருப்பி அனுப்புவதற்கும் மாத்திரமே அரசாங்கம் குடியேற்றவாசிகளை தடுத்து வைத்திருக்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்ததீர்ப்பு அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் விடயத்தில் பாரிய மாற்றங்களை கொண்டுவரலாம் என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
2013 யூலை மாதத்திற்கு முன்னர் வந்தவர்களை தடுத்து வைப்பது தற்போது சட்டவிரோதமாகியுள்ளது. அவர்களை அரசாங்கம் தற்போது விடுவிக்கவேண்டும் அல்லது அவர்களின் அகதி அந்தஸ்து கோரிக்கையை பரிசிலிக்க வேண்டும்.
|

.jpg)
0 Comments