மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் காந்தி சதுக்கத்தின் முன் இன்று செவ்வாய்க்கிழமை (16) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர்.
2011 ஆம் ஆண்டு வெளியாகிய பட்டதாரிகளுள் 160 பேருக்கு இதுவரை நியமனம் வழங்கப்படாததைக் கண்டித்தே ஆர்ப்பாட்டம நடைபெற்றது.
இதுபற்றி மாவட்ட அரச அமைச்சர்கள் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அறிவித்தும் இது வரை எதுவும் நடைபெறாததினால் இப்போராட்டத்தை ஒழுங்கு செய்ததாக பட்டதாரிகள் சங்கத் தலைவர் யு. உதயவேந்தன் தெரிவித்தார்.
வேலை வழங்காவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு விரிவுரையாளர்கள்; மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக கலைப்பீட பட்டதாரிகளுக்குரிய பட்டமளிப்புச் சான்றிதழ் தாமதமாகி கிடைத்ததினால் இப்பாதிப்பு ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அரச அதிபரிடம் மகஜரை கையளிக்கச் சென்ற பட்டதாரிகளை பொலிசார் மாவட்டச் செயலக வாசலில் வைத்து தடுத்த நிலையில் நான்கு பேரை மட்டும் உள்ளே செல்ல அனுமதித்ததோடு அவர்கள் மேலதிக அரச அதிபர் எஸ் கிரிதரனிடம் கையளித்தனர்.
மீள்குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரனிடமும் மகஜர் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments