அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் இருவர் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்று இரண்டு வெள்ளிபதக்கங்களைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா 2014 நோக்கியதான போட்டிகளில் இந்த சாதனையை மாணவர்கள் படைத்துள்ளனர்.
கடந்த 14,15,16ஆம் திகதிகளில் கொழும்பு அசோக்கா வித்தியாலயத்தின் உள்ளக அரங்கில் இந்த தேசிய ரீதியான போட்டிகள் நடைபெற்றன.
இந்த போட்டிக்கு ஐந்து மாணவர்கள் தோற்றியதுடன் இந்த மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மட்டுமன்றி கிழக்கு மாகாணத்துக்கே பெருமை சேர்த்துள்ளனர்.
17வயதுக்குட்பட்ட மல்யுத்த போட்டியில் 58 கிலோ கடேற் பிரிவில் என்.பிரகாஸ் வெள்ளிப்பதக்கத்தினைப்பெற்றுக்கொடுத்துள்ளார்.19வயது பிரிவில் 55கிலோ கடேற் பிரிவில் என்.நிசோத் வெள்ளிப்பதக்கத்தினைப்பெற்றுக்கொடுத்துள்ளார்.
இ;ந்த மாணவர்களுடன் இணைந்த ஏனைய மாணவர்களும் தங்களது பங்குபற்றுதல் மூலம் பாடசாலைக்கும் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.இவர்களை பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.பி.குகாதரனின் வழிகாட்டலின் கீழ் கல்லடி உப்போடை சாண்டோ விளையாட்டுக்கழக பயிற்றுவிப்பாளரும் ஆசிரியருமான வி.திருச்செல்வம் பயிற்சிகளை வழங்கியிருந்தார்.
சாதனைகள் படைத்து திரும்பிய மாணவர்களுக்கும் அவர்களை பயிற்றுவித்த பயிற்சியாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
பாடசாலை சமூகத்தினால் இந்த மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் இந்த நிகழ்வில் இராம கிருஸ்ண மிசன் சுவாமி மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலையில் கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றது.

0 Comments