Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மகிழூரில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண்னொருவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று புதன்கிழமை (17)உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று காலை மகிழூர்,கண்ணகிபுரம் மத்திய மருந்தகத்துக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து மூன்று பிள்ளைகளின் தாயான தங்கராசா கோமதி(43வயது)என்ற பெண்ணின் சடலமே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி அதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் சுகுணன் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments