மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கஜுவத்தையிலுள்ள கடற்படையினரின் வாகனம் மட்டக்களப்பு சென்று கொண்டிருந்த போது ஓட்டமாவடி பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இதில் 4 கடற்படை வீரர்கள் படுகாயமடைந்தனர் என்று வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை 18.09.2014 சற்று முன்னர் 3.30 மணியளவில் இடம்பெற்றது.
முன்னதாக காயமடைந்த கடற்படை வீரர்கள் நால்வரும் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் அவர்களில் இருவரது நிலைமை மோசமாக இருந்ததனால் அவர்கள் இருவரும் சற்று முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடற்படை வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே இந்த விபத்து சம்பவிப்பதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது. வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments