Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் மதுபானசாலைக்கு முன்னால் விபத்து ! சற்று முன்னர் ஒருவர் ஸ்தலத்தில் பலி !

கல்முனை இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்து தனியாருக்குச் சொந்தமான பஸ்வண்டியும் பிரதான வீதியில் ஓந்தாச்சிமடம் இருந்து களுவாஞ்சிகடியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்து துவிச்சக்கர வண்டியும் களுவாஞ்சிகுடி மதுபாவனை சாலைக்கு முன்னால்  விபத்துக்குள்ளானது. (15.09.2014 பி.ப. 5.00)இச்சம்பவத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஸ்தலத்திலே பலியானார். இச்சம்பவம் பஸ்வண்டியின் வாகன சாரதி இன்னொரு பஸ்வண்டியுடன் போட்டி போட்டுக் கொண்டு முந்த எத்தணித்த வேளையில் இவ்விபத்து ஏற்பட்டது. மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.








Post a Comment

0 Comments