Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது ஊவா தேர்தல் பிரசாரம்! - 12 ஆயிரம் பொலிசார் பாதுகாப்பு.

ஊவா மாகாணசபைத் தேர்தலுக்கான பிரசார பணிகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது. ஊவா மாகாண சபைத் தேர்தலை யொட்டி விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் இதற்கென ஆயிரம் விசேட அதிரடிப் படை வீரர்கள் உட்பட 12 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் ஸ்தாபிக்கப்படும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வெளியில் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தில் நடமாடும் சேவை, வீதிச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இயங்கும் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் மேலதிகமாக கடமையில் ஈடுபடுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊவா தேர்தலுக்கான பிரசார பணிகள் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதால் அதன் பின்னர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டவிரோதம் எனவும் அவர் தெரிவித்தார். வாகன ஊர்வலம், சைக்கிள் ஊர்வலம் வேறு வகையான ஊர்வலங்கள் மேற்கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தை மீறி சட்ட விரோதமாக தேர்தல் அலுவலகங்கள். கட்அவுட்கள் பதாதைகள் வைத்திருக்கும் நபர்களும் வாகனங்களும் கைப்பற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெற உள்ளதோடு தேர்தல் வன்முறை தேர்தல் சட்டம் மீறல் தொடர்பில் சுமார் 50 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஊவா மாகாண தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்குமிடையில் அண்மையில் பேச்சு நடந்தது.

Post a Comment

0 Comments