Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியையை முழந்தாளிட வைத்த ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக சாட்சியமளித்தவர் சடலமாக மீட்பு!

வடமேல் மாகாணத்தில், நவகத்தேகம தேசிய பாடசாலையில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியையை முழந்தாளிட வைத்த சம்பவம் தொடர்பான வழக்கில் நான்காவது சாட்சியாக சாட்சியமளித்தவரின் சடலம்,பாடசாலைக்கு முன்பாக மீட்கப்பட்டுள்ளது. புஞ்யசேன பண்டார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். நவகத்தேகம தேசிய பாடசாலையில் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியர் துசிதா ஹேரத் என்ற ஆசிரியை முழந்தாளிட வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வடமேல் மாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவிற்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments