ராஜபக்ச குடும்பத்தின் பிடியில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பற்றும் இயக்கம் ஒன்று அந்த கட்சிக்குள் உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வேலைத்திட்டத்திற்கு இணங்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் மூலம் இந்த தகவல் கசிந்துள்ளது. மேற்படி இயக்கத்தினர் 15 விடயங்களுடன் கூடிய வேலைத்திட்டத்தை உருவாக்கி அது குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கு எதிராக முனைப்புகளை மேற்கொண்டு வரும் இந்த குழுவினர் குறித்து அரச உயர்மட்டம் மௌனம் காத்து வருகிறது.
|
மகிந்த அரசாங்கத்தை விமர்சிக்கும் 50க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்த குழுவில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் அரச உயர்மட்டத்தின் ஒற்றர்களும், உண்மையில் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குழுவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பவர்கள் என பேசப்படுகிறது.
|
0 Comments