காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பவர்கள் இலங்கைப் படையினரால் அச்சுறுத்தப்படுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய, இவ்வாறான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. புலம்பெயர்ந்த - புலிகளுக்கு ஆதரவான ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது அடிப்படையற்றது என்றும் ரூவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
|
இவ்வாறான நம்பகமான தகவல்கள் கிடைத்தால் அமெரிக்க தூதரகம் தமது அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் இலங்கை அரசாங்கத்துக்கு முறையிடலாம். இதனைவிடுத்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவது அதன் அதிகார வரம்பு மீறிய செயற்பாடு என்று வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
|
0 Comments