Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்த உற்சவத்தின்போது கொள்ளைகளில் ஈடுபட்ட புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்த உற்சவத்தின்போது கொள்ளைகளில் ஈடுபட்ட குழுவொன்றினை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பெண்னொருவரின் கழுத்தில் இருந்த மாலையினை கொள்ளையிட்டுச்சென்றபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் இரு பெண்களும் ஒரு ஆணும் உள்ளடங்குவதாகவும் கைதுசெய்யப்பட்ட பெண்கள் புத்தளம் பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் எனவும் ஆண் நிக்கவரெட்டிய பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் பொலிஸ் புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மாமாங்கேஸ்வரர் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினரினால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன்போதே இந்த கொள்ளை குழுவினரை கைதுசெய்ததாகவும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

Post a Comment

0 Comments