நடிகருடன் கண்சிகா செக்ஸ் கூத்து -மடக்கிபிடித்த பொலிஸ்
தெலுங்கின் முன்னணி நடிகர் ரவிதேஜாவும், நடிகை ஹன்சிகாவும் ‘பவர்’ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர். இப்படத்தை கே.எஸ்.,ரவீந்திர ரெட்டி இயக்கி வருகின்றார். ரஜினியின் ‘லிங்கா’ படத்தை தயாரிக்கும் ராக்லைன் வெங்கடேஷ் தான் இந்த படத்தையும் தயாரிக்கின்றார்.
ஹன்சிகா மற்றும் ரவிதேஜாவின் டூயட் பாடல் காட்சியை பல்கேரிய நாட்டில் படமாக்கி வருகின்றனர். இதற்காக ரவிதேஜா, ஹன்சிகா படப்பிடிப்பு குழுவினர் பல்கேரியா நாட்டில் முகாமிட்டுள்ளனர். பல்கேரிய தலைநகர் சோபியாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவருக்கும் தனித்தனி அறைகள் படக்குழுவினர்களால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
சம்பவம் நடந்த அன்று ரவிதேஜாவும் ஹன்சிகாவும் ஓய்வு நேரத்தில் ஒரே அறையில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. அந்த நாட்டின் விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த ஒரு வார காலமாக சோபியாவில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் சோதனை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஹன்சிகா தங்கியிருக்கும் ஓட்டலிலும் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சமயத்தில் ரவிதேஜாவும் ஹன்சிகாவும் ஒரே அறையில் இருந்ததால் காவல் துறையினருக்கும், விபசார தடுப்புப்பிரிவு போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
பல்கேரிய நாட்டு சட்டப்படி திருமணம் ஆகாத ஜோடி ஒரே அறையில் தங்குவது கடுமையான குற்றமாகும். வெளிநாட்டினர் என்பதால் இருவரிடமும் போலீஸார் துருவி துருவி விசாரணை செய்ததாகவும், அதன்பின்னர் படக்குழுவினர் விரைந்து வந்து போலீஸாரிடம் தாங்கள் இந்தியாவில் இருந்து வந்த படப்பிடிப்பு குழுவினர் என்று கூறிய பின்னர் போலீஸார் எச்சரிக்கை செய்துவிட்டு சென்றுள்ளனர்.
இந்த தகவல் தெலுங்கு சினிமா உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழுவினர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, அப்படி ஒரு சம்பவம் பல்கேரியாவில் நடக்கவே இல்லை என்றும், யாரோ வேண்டுமென்றே தவறான தகவலை கூறி புரளியை கிளப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பல்கேரியாவில் அரசு உத்தரவின் படி, அந்நாட்டில் விபச்சாரத்தை ஒழிக்க கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது உண்மை. இந்த செய்தி பல்கேரியா நாளிதழில் கடந்த வாரம் வெளிவந்துள்ளது.
0 Comments