Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

‘ஹக்கீமின் மற்றுமொரு குண்டு’ – சிங்கள ஊடகம்

புனித உம்ராவுக்குச் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்வரும், நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம், அங்கு உலக இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கை வாழும் முஸ்லீம்களுக்கு நடைபெறும் பிரச்சினைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
‘ஹக்கீமின் மற்றுமொரு குண்டு’ என்ற தலைப்பில் இன்றைய ஞாயிறு பத்திரிகையொன்றில் இச்செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் ஹக்கீமும் அவரது குழுவும் சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்குச் சென்று உலக இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், அங்கு அவர்கள் இலங்கை வாழும் முஸ்லீம்களுக்கு நடைபெறும் பிரச்சினைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளதாகவும் அப்பத்திரிகையில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேபோன்றுதான் ஏற்கனவே இலங்கையில் வாழும் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது எனத் தெரிவித்து அறிக்கை ஒன்றை முஸ்லீம் காங்கிரஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடமும், நவநீதம் பிள்ளையிடமும் சமர்பித்ததாக அப் பத்திரிக்கை மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments