Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாரடைப்பைத் தடுக்கும் நார்ச்சத்து உணவுகள்

மாரடைப்பைத் தடுக்கும் நார்ச்சத்து உணவுகள்
இன்று மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது. இதற்கு, வாழ்க்கை முறை மாற்றம், உணவுமுறை மாற்றம் போன்ற பல விஷயங்களை மருத்துவர்கள் காரணமாகக் கூறுகின்றனர். அதிலும் மாரடைப்பில் இருந்து மீண்டு வந்தவர்கள், அதுகுறித்த அச்சத்துடனே காலத்தைத் தள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில், மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதாரப் பிரிவு ஆய்வு நடத்தியது.
அதில், மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டு 9 வருடங்களுக்கு பிறகும் ஆரோக்கியமாக உயிர் வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உணவுப்பழக்கம், பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட நபர்களின் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய, உயிருக்கு ஆபத்தான மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. நார்ச்சத்து, பெரும்பாலும் பழங்களிலும் காய்கறிகளிலும், முழுத் தானியங்களிலும் காணப்படுகிறது என்பதும்,
அது குடலுக்கு மிகவும் நல்லது என்பதும் ஏற்கனவே எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். எனினும் பல நாடுகளில் உள்ள மக்கள் அதனை போதுமான அளவு உட்கொள்வதில்லை என்பதே உண்மை.

Post a Comment

0 Comments