அவுஸ்திரேலியாவில் இரவில் சுத்திகரிக்கும் பணிகளில் ஈடுபடும் மாணவர்கள் பகலில் போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.
அவுஸ்திரேலியாவில் சுத்தம் செய்யும் பணியாளர்களின் உரிமைகளுக்காக போராடும் யுனைடெட் வொய்ஸ் அமைப்பின் பெரும்பாலான அங்கத்தவர்கள் இலங்கை உட்பட வேறு நாடுகளில் இருந்து வந்து மேற்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை, இந்தியா, பங்களாதேஸ் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் மாணவர்கள் அங்கு தமது மேற்படிப்புக்காக பணத்தை தேடிக்கொள்ள சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதன்போது அவுஸ்திரேலிய சட்டப்படி ஒரு மணித்தியாலத்துக்கு 24 டொலர்கள் வரை கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டும்.
எனினும் இலங்கை உட்பட்ட நாடுகளின் மாணவர்களுக்கு 15 டொலர்கள் வரையிலான குறைந்த கொடுப்பனவுகள் செலுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
இந்தநிலையில் இரவுவேளைகளில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடும் இவர்கள் காலையில் தமது நோக்கங்களுக்கான அலுவலகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் செல்கின்றனர்.
அத்துடன் தமது குறைந்த கொடுப்பனவுக்கு எதிராக யுனைடெட் வொய்ஸ் அமைப்பு நடத்தி வரும் போராட்டங்களிலும் அவர்கள் பங்கேற்பதாக தெரிவிக்கப்படுகிறது.


0 Comments