அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் நட்டஈடு கோரத் திட்டமிட்டுள்ளதாக அவர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். படகு மூலம் சென்று புகலிடம் கோரிய தங்களை அவுஸ்திரேலிய அரசு உரிய முறையில் பராமரிக்கத் தவறியுள்ளதாக, குற்றம்சாட்டியுள்ள 157 இலங்கை அகதிகளும் நட்டஈடு கோர உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் கடலில் தடுத்து வைக்கப்பட்டதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக அகதிகள் சட்டத்தரணிகள் ஊடாக தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய அதிகாரிகள் தம்மை மிகவும் கடுமையாக நடத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளனர். அகதிகளின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
0 Comments