சொற்கணை - 2014 - தமிழருவி தமிழ் இலக்கிய மன்றம் மொறட்டுவப் பல்கலைக்கழகம் நடாத்திய அகில இலங்கை ரீதியிலான விவாதச் சமரில் மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிக்குடி சார்பாக த.ரிசான், செ.விமல்ராஜ், த.ஜெயந்தன், ஜெ.இந்துஜன், ர.சிவசித்தா ஆகிய மாணவர்கள் போட்டியில் பங்குபற்றி பாடசாலைக்கு புகழைத் தேடித்தந்தமை பாராட்டத்தக்க விடயமாகும். அத்துடன் இந்நிகழ்ச்சிக்கு வழிகாட்டல் ஆலோசனைகளை திரு.எஸ். சுதர்சனன் ஆசிரியர் வழங்கியிருந்தமை குறிப்படத்தக்கதாகும். இந்நிழ்ச்சியில் பங்குபற்றி சாதனைபடைத்த மாணவர்களுக்கு பாடசாலையின் அதிபர் பொன் .வன்னியசிங்கம் அவர்கள் பாராட்டி கிண்ணத்தை வழங்கிவைப்பதை படங்களில் காணலாம்.




0 Comments