Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அவுஸ்திரேலியாவில் அகதி படகை இலங்கைக்கு திருப்பியமையை கண்டித்து இடம் பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்

அண்மையில் இலங்கை அகதிகள் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு படகில் வந்த காரணத்தினால் அவர்களை நடுக்கடலில் வைத்து பெரிய அதிவேக படகுகள் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அகதிகளுக்காக செயற்ப்படும் அமைப்பான [ Refugee Action Coalition Sydney] இன்று நடத்தியது . குடிவரவு திணைக்களத்துக்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது உண்மையில் இலங்கை புகலிடக்கோரிக்கை யாளர்களுக்கு நடந்தது என்ன என்பதை மாக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும் என்றும்.
இலங்கை அகதிகளை மீளவும் இலங்கைக்கு அனுப்பவேண்டாம் எனற கோசத்துடன் ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். அவுஸ்ரேலியா வாழ் வெள்ளை இனத்தவர்கள் தமிழர்களுக்காக பாதையில் இறங்கி ஆர்ப்பாட்டத்தை மிகவும் ஆக்க பூர்வமாக நடத்திய போதும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள் சார்பில் பெரிதாக ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments