Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நயன்தாரா நடிக்கும் திகில் படத்தில் விபத்து நடிகர் ஆரி தோள் பட்டை இறங்கியது


நயன்தாரா நடிக்கும் திகில் படத்தில், திடீர் விபத்து ஏற்பட்டது. அதில், நடிகர் ஆரியின் தோள் பட்டை இறங்கியது.
நயன்தாரா, ’நைட் ஷோ’ என்ற திகில் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன், ’நெடுஞ்சாலை’ புகழ் ஆரி நடிக்கிறார். அஸ்வின் சரவணன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு சென்னை பொழிச்சலூரை அடுத்த காட்டுப்பகுதியில் நடந்தது.
இன்று அங்கு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. ஆரி சில மர்ம நபர்களுடன் மோதுவது போன்ற காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு&அறிவு ஆகிய இருவரும் படமாக்கிக்கொண்டிருந்தார்கள். உயரமான ஒரு இடத்தில் இருந்து தரையில் ஆழமாக தோண்டப்பட்டிருந்த குழிக்குள் ஆரி குதிப்பது போன்ற காட்சியை படமாக்கினார்கள்.}
அப்போது ஆரியின் வலது தோள் பட்டையில் பலத்த அடிபட்டது. அவருடைய தோள் பட்டை கீழே இறங்கியது. ஆரி வலி தாங்காமல் துடித்தார். உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஆரி, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருடையை தோள் பட்டையில் கட்டு போடப்பட்டது.

’’ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும்’’ என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதன் பேரில், ஆரி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.

Post a Comment

0 Comments