மட்டக்களப்பு பொதுச்சந்தைக்கு முன்னால் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று (20) காலை 10 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொதுச்சந்தை துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு கூடாரத்தினுள்ளே இச்சடலம் காணப்பட்டுள்ளது.
சடலம் கரவெட்டியைச் சேர்ந்த 53 வயதுடைய முத்துப்பிள்ளை கணபதிப்பிள்ளை என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 Comments