வானில் இருந்து கொடூரமான நிலையில் சடலங்களாக வந்து தரையில் விழுந்ததாக மலேசிய விமானம் சுட்டுத்தள்ளப்பட்ட பிறகு விழுந்த இடத்திற்கு அருகே இருந்த உக்ரைன் மக்கள் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர்.
சடலங்கள் சுட்டுத்தள்ளப்பட்ட விமானத்தில் இருந்து சடலங்களாக வானில் இருந்து விழுந்தன. அந்த காட்சியை பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருந்தது என்று உக்ரைன் வாசிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்வெட்டர் வானில் இருந்து விழுந்த கருப்பு நிற ஸ்வெட்டர் அணிந்த ஒரு பெண் சடலத்தின் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. அவரது இடக்கை ஏதோ சொல்வது போன்று உயர்த்திய நிலையில் இருந்தது என்று ஒருவர் தெரிவித்தார்.
கந்தல் கோலத்தில் வானில் இருந்து சடலங்கள் கந்தல் கோலத்தில் விழுந்தன. சிறிது நேரத்தில் சடலங்கள் விழுந்த இடத்தில் இருந்து துர்நாற்றம் வர துவங்கியது என்றார் ஒருவர்.
0 Comments