Advertisement

Responsive Advertisement

ஆஸ்திரேலிய அணி யாழ்ப்பாணத்தில் மண்கவ்வியது! - யாழ். கிரிக்கெட் அணி சாதனை

யாழ்.மாவட்டக் கிரிக்கெட் தெரிவு அணிக்கும், ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து வருகை தந்துள்ள இளைஞர் கிரிக்கெட் அணிக்கும் இடையேயான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்.அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை குவித்தது. பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸி.அணி 20 ஓவர்கள் நிறைவில் 53 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்து படுதோல்வியை தழுவியது.
யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் போட்டி பிரபல்யம் வாய்ந்த ஒன்றாக விளங்குவதுடன் இலங்கைக்கு என சாதனையை படைத்து புகழ்பெற்ற வீரராக திகழும் முத்தையா முரளிதரன் போல் யாழ்.மாட்டத்திலும் பல முரளிதரன்களை உருவாக்கும் நோக்கிலே இந்த கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை இராணுவத் தலைமையகம் மற்றும் யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.






Post a Comment

0 Comments