மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொக்குவில் தலையாழிப் பகுதியில் வசித்த இவர் வீட்டு முற்றத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் நிலையில் சடலமாகக் காணப்பட்டார். கலைப்பீட மூன்றாம் வருட மாணவனான வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த சிவலிங்கம் யசோதரன் (வயது 24) என்பவரே இவ்வாறு மரணமானவராவார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
|
அதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் தொடரும் பழிவாங்கலே இந்த தற்கொலைக்குக் காரணம் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக தற்கொலைக்கு முயன்று கைகளை பிளேடினால் அறுத்துக் கொண்ட அவர் அது பலித்திராத நிலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். தோல்வியுற்ற பாடமொன்றிற்கான மீள்பரீட்சையில் தோற்ற நிர்வாகம் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வந்திருந்த நிலையில் விரக்தி அடைந்து அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. யாழ்.பல்கலையில் இத்தகைய மாணவ தற்கொலைகள் தற்போது சாதாரணமாகியுள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இவர் தற்கொலைக்கு முன்னர், சமூக வலைப்பதிவில் சில பதிவுகளை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() ![]() ![]() |
0 Comments