யாழ். குருநகர் யுவதி ஜெரோம் கொன்சலிற்ற நீரில் மூழ்கியதனாலையே உயிரிழந்தார் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
யாழ். குருநகர் பெரிய கோவிலுக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து கடந்த ஏப்பிரல் மாதம் 14ம் திகதி ஜெரோம் கொன்சலிற்ற (வயது 22) எனும் யுவதி சடலமாக மீட்கப்பட்டார்.
அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24) காலை யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் முன்னிலையில் எடுத்து கொள்ளபப்ட்டது.
இவ் வழக்கு விசாரணைகளில் மூலம் ஜெரோம் கொன்சலிற்ற எனும் யுவதி நீரில் மூழ்கியதனாலையே உயிரிழந்தார் என்பது உறுதியாகியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
அத்துடன் குறித்த யுவதி பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளாரா என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ம் திகதி மன்றில் சமர்பிக்கும் படி கோரியதுடன் வழக்கினை அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தார்.
குறித்த யுவதியின் மரணத்திற்கு யாழ். ஆயர் இல்லத்தை சேர்ந்த இரு பாதிரிமார்களே கரணம் என அவ் யுவதியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளார்கள் என்பதுடன் குறித்த யுவதி யாழ். ஆயர் இல்லத்தில் மறைக்கல்வி கற்பித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
0 Comments