Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் 28162 பேர் தொழில் இன்றி உள்ளனர்ஆடைத்தொழிற்சாலை அமைத்தால் வேலைவாய்ப்பு

மட்டக்களப்பு  மாவட்டத்தின்  போரதீவுப்பற்று  பிரதேச  செயலகப்பிரிவில்    68.3  வீதமானோர்  தொழில்  வாய்ப்பின்றி  உள்ளதாக  போரதீவுப்பற்று  பிரதேச  செயலாளர்  என்.வில்வரெட்னம்  தெரிவித்தார்.இவ் எண்ணிக்கை  28  ஆயிரத்து 162  எனவும்  அவர்  சுட்டிக்காட்டினார்.
684  பேர்  மாத்திரமே  அரச  தொழிலில் ஈடுபட்டுள்ளனர்  எனத்தெரிவித்த  பிரதேச  செயலாளர்  49 பேர்  அரசசார்பற்ற  நிறுவனத்திலும்  2063  பேர்  விவசாயத்திலும்  ,280  பேர்  கால்நடை  வளர்ப்பிலும்,235  பேர்  மீன்பிடியிலும்  ஈடுபட்டு  வருவதாக  குறிப்பிட்டார்.
4937   பேர்  நாள்  கூலி  வேலையிலும்,  ஈடுபட்டு  வருகின்றனர்,  எனத்தெரிவித்த  பிரதேச  செயலாளர்  2523  பேர்  வெளிநாட்டில்  தொழில்  புரிவதாகவும்   தெரிவித்தார்.
தொழில்  வாய்ப்புகளை  ஏற்படுத்துவதற்கு  தொழிற்சாலைகளை   அமைக்கமுடியும்  எனத்தெரிவித்த  பிரதேச  செயலாளர்,ஆடைத்தொழிற்சாலை  அதிகளவு  பொருத்தமானது  எனவும்  கருத்து  தெரிவித்தார்.

Post a Comment

0 Comments