மட்டக்களப்பு, முகத்துவாரம் வாவியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டதுடன் சுமார் 54 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் மீன்படி இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.
நேற்று (22) மாலை 7 மணிமுதல் இன்று (23) அதிகாலை 2 மணி வரை கடற்படையினரின் உதவியுடன் மாவட்ட கடற்றொழில் பரிசோதகர்கள் முகத்துவாரம் வாவியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போது இச்சட்டவிரோத வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட வலைகள் இயந்திரங்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மாவட்ட கடற்றொழில் பரிசோதகர்களான ரி.பாலமுகுந்தன், ரி.அமிர்தலிங்கம், ரி.மனோகரன் எஸ்.ஐ.எம்.இம்தியாஸ், எம்.முர்திஸ்.ஏ.அர்சாத் ஆகியோர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நடவடிக்கையின்போது 8640 அடி சட்டவிரோத வலைகள் மற்றும் 8 இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments