Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சனிக்கிழமைகளில் அசாம்பாவிதங்களால் சிக்கி தவிக்கும் சென்னை மாநகரம்


சென்னையில் கடந்த சில வாரங்களாகவே துயர சம்பவங்கள் துரத்தி துரத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக சனிக்கிழமைகளில் நடக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை தரக்கூடியதாகவே அமைந்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் 28&ந் தேதி சனிக்கிழமை அன்று மவுலிவாக்கத்தில் 11 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியாயினர். 27 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.

இந்த துயர சம்பவம் மறைவதற்குள் அதற்கு அடுத்தவாரம் சனிக்கிழமை நள்ளிரவில் பெய்த கனமழையில் நள்ளிரவு 3 மணியளவில் சென்னையை அடுத்த செங்குன்றம் அலாதி எடப்பாளையம் அருகே கட்டிட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் சனிக்கிழமை மாலையும் ஒரு அதிர்ச்சி சம்பவத்தை சென்னை சந்தித்தது. சென்னை பாரிமுனையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் நல்லவேளையாக ஊழியர்கள் யாரும் சிக்காமல் தப்பித்துக்கொண்டனர். ஆனால் கட்டிடம் முழுவதும் தீக்கு இரையானது.

Post a Comment

0 Comments