மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்.எச்.17), நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த போது, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் நேற்று முன்தினம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உயிரிழந்து கரிக்கட்டைகள் போன்று உருக்குலைந்து போயினர். சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து 15 கி.மீ. சுற்றளவுக்கு விமானத்தின் சிதைவுகளும், உயிரிழந்தவர்களின் உடல்களும் சிதறிக் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 181 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த உடல்கள், சம்பவ இடத்தில் இருந்து 270 கி.மீ. தொலைவில் உள்ள கார்கிவ் என்ற இடத்துக்கு அடையாளம் காணப்படுவதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன.
இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது தொடர்பாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும், உக்ரைன் அரசு படையினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் உக்ரைன் அரசு அதிகாரி ஒருவர் , ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் பக் என்னும் நவீன ரக ஏவுகணையை கொடுத்திருப்பதாகவும், அந்த ஏவுகணை 28 கிமீ தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது என்றும் கூறியுள்ளார். ஆனால் உக்ரைன் அரசின் இந்த கருத்தை ரஷ்யா கடுமையாக மறுத்துள்ளது. இதனால் மலேசிய விமானம் MH17ஐ சுட்டு வீழ்த்தியது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிற நிலையில், சம்பவத்தை தொடர்ந்து ரஷிய உளவுத்துறை அதிகாரிகள் விவாதித்தது தொடர்பான ஒலிப்பதிவுகளை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது.
![]() | ![]() |
அதில் அவர்கள், ‘உக்ரைன் ராணுவ விமானம் என நினைத்து கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தி விட்டனர். ஆனால் அப்புறம்தான் தெரிந்தது அது பயணிகள் விமானம் என்று’ என அவர்கள் பேசிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் இரண்டு கறுப்பு பெட்டிகளையும் (ஒன்று ஒலிப்பதிவு பெட்டி, மற்றொன்று தகவல் பதிவு பெட்டி) கைப்பற்றி உள்ளதாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கறுப்பு பெட்டிகளை அவர்கள் பரிசோதனைக்காக ரஷியாவுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த சோதனைக்கு பின்னர் விமானத்தில் கடைசி நிமிடத்தில் நடந்த நிகழ்வுகள் அம்பலத்துக்கு வரும்.
![]() | ![]() |
* விமான விழுந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த இரினா திபுனோவா (வயது 65) எனபவர் கூறுகையில் பெருத்த ஊளை சத்தம் கேட்டது . அதை தொடர்ந்து தனது வீட்டின் மேற்கூரையை உடைத்து மழைபோல் சடலங்கள் விழ தொடங்கியது. இன்னும் ஆடை இல்லாத ஒரு பெண் சடலம் தனது வீட்டிற்குள் இன்னும் உள்ளது என கூறினார்.மேலும் ஒரு சடலம் தனது படுக்கையில்; வந்து விழுந்ததாக கூறினார். நிபுண்ர்கள் வரும் வரை காத்திருக்குமாறு அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆங்காங்கே வயல் வெளீகளில் சடலங்கள் விழுந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* சம்பவ நடந்த இடத்தில் யாரும் எதையும் தொடக்கூடாது என சர்வதேச விசாரணை குழு கூறி இருந்தது. இருந்த போதிலும் ரஷ்யா மற்றும் கிளர்ச்சியாளர்கள் சம்பவ இடத்தில் 38 சடலங்களை அப்புறபடுத்தி உள்ளனர் அப்போது அவர்கள் விமான விபத்துக்கான சாட்சியங்களை அழித்து உள்ளனர் என உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
![]() | ![]() |
* சர்வதேச அழுத்தத்தை தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி வால்டிமர் புதின் ஒபாமாவுக்கும் ஐநாசபை பிரதிநிதிகளுக்கும் மலேசிய விமான சுட்டு வீழ்த்தபட்டது குறித்த அறிக்கையை அனுப்பி உள்ளார்.
* விமான விழுந்த இடத்தில் ஆய்வு நடத்த சென்ற சர்வதேச ஆய்வாளர்களை அந்த பகுதியில் குடிபோதையில் மற்றும் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியாளர்களால் தடுக்கபடுகின்றனர்.
* பிரிட்டன் ஜான் ஆல்டர் ( வயது 63) எனபவர் சடல் உள்பட பல சடலங்களை கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது.
0 Comments