Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புதிய போக்குவரத்து ஒழுங்கு விதிகள் அறிமுகம்

புதிய போக்குவரத்துச் சமிக்ஞைகளை அறிமுகம் செய்ய மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் பயன்படுத்தக் கூடிய சமிக்ஞைகள் மற்றும் போக்குவரத்துடன் தொடர்பான இரசாயனப் பொருட்களின் பயன்படுகள் என்பன குறித்த குறியீடுகள் உள்ளடங்கப்பட்ட புதிய போக்குவரத்துச் சமிக்ஞைகளை திணைக்களம் அறிமுகம் செய்யவுள்ளது.

இதன்படி, புதிய சமிக்ஞைகளுடன் 215 குறியீடுகள் கொண்ட போக்குவரத்துப் பாதை ஒழுங்கு விதிகள் கோவையொன்றை அரச வர்த்தமானியில் பிரசுரிக்கவுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள வீதி ஒழுங்கில் நிறங்களின் பயன்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவேயுள்ள மஞ்சல் நிறத்துக்குப் பதிலாக வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் எஸ்.எச். ஹரிஸ்சந்திர சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

  

Post a Comment

0 Comments