இலங்கையின் மேலும் பல ஏக்கர் அரச காணிகள் சீனாவுக்கு வழங்கப்படவுள்ளன. புதிய ஏற்பாட்டின்படி கம்பஹாவில் உள்ள 198 ஏக்கர் நிலம் சீன நிறுவனம் ஒன்றுக்கு உரித்தாகவுள்ளது. கண்டி - கொழும்பு வீதி அமைப்புக்காகவே இந்த நிலம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிலம் தொடர்பில் ஏற்கனவே இலங்கை அரசாங்கமும் சீன தனியார் நிறுவனமும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. ஏற்கனவே சீன நிறுவனத்துக்கு கொழும்பு காலிமுகத்திடலில் வழங்கப்பட்ட நிலப் பகுதியில் தற்போது கட்டிட அமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
0 Comments