Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புலிகளைத் தோற்கடித்த இலங்கையின் அனுபவத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! - பொலிஸ் அதிகாரி ஆலோசனை

விடுதலைப் புலிகள் அமைப்பை தோல்வியடையச் செய்த இலங்கையிடம் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமென பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான பொலிஸ் அதிகாரியான முஹமட் அலி பாபாகல் எழுதியுள்ள கட்டுரையொன்றில், இஸ்லாமிய தீவிரவாதிகளை எவ்வாறு இல்லாதொழிப்பது என்பது குறித்து இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும். நாட்டு மக்களின் ஆதரவும் இராணுவத்தின் பலமும் கூடினால் தீவிரவாதிகளை இல்லாதொழிக்க முடியும் என்ற பாடத்தை இலங்கையிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
இலங்கையின் ஒட்டுமொத்த தந்திரோபாயங்களையும் பின்பற்ற முடியாவிட்டாலும் இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டு தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியும். இராஜதந்திரம் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது என்பதனை இலங்கை விவகாரத்தில் அவதானிக்க முடிகிறது. எண்ணிக்கையை விடவும் தரம் முக்கியமானது என்பது இலங்கை விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளது. விடுதலைப் புலிகளின் நிதி மூலங்களை முடக்கி ராஜதந்திர ரீதியாக புலிகளை இலங்கை அரசாங்கம் தனிமைப்படுத்தி யுத்ததை வெற்றி கொண்டதாகவும் பாகிஸ்தான் உயர் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments