Home » » படகு அடித்து செல்லப்பட்டதால் 16 மாதங்கள் கடலில் வாழ்ந்த முதியவர்

படகு அடித்து செல்லப்பட்டதால் 16 மாதங்கள் கடலில் வாழ்ந்த முதியவர்

ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் ஜோஸ் இவான் (65). கடந்த 2012–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மெக்சிகோவில் இருந்து எல்கால் வேடார் நாட்டுக்கு 24 அடி நீள படகில் பயணம் மேற்கொண்டார்.
இவருடன் மேலும் ஒரு நபரும் பயணம் செய்தார். இவர்கள் பசிபிக் கடலில் சென்று கொண்டிருந்த போது நடுக்கடலில் படகின் என்ஜின் பழுதடைந்ததது. எனவே, படகை கட்டுப்படுத்த முடியவில்லை.
இது தானாகவே வேறு திசையில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்படகு சுமார் 12,500 கி.மீ தூரம் தானாகவே பயணம் செய்தது.
இதற்கிடையே உடன் வந்த நபர் இறந்து விட்டார். படகு நடுக்கடலில் பயணம் செய்து கொண்டே இருந்தது. இதனால் ஜோஸ் இவான் மட்டுமே சுமார் 16 மாதங்கள் பயணம் மேற்கொண்டார்.
இப்படகு நார்வே நாட்டின் மார்ஷால் தீவுகள் பகுதியில் சென்ற போது கடல் ஆராய்ச்சி மாணவர்கள் அவரை பார்த்து மீட்டனர். அப்போது ஜோஸ் இவான் உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக இருந்தார்.
அவரது உடை கிழிந்த நிலையில் இருந்தது. பார்க்க பரிதாபமாக தோற்ற மளித்தார். கடலில் கிடைத்த ஆமைகள், மீன்கள் மற்றும் பறவைகளை பிடித்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாக கூறினார். தண்ணீருக்கு பதில் ஆமைகளின் ரத்தத்தை குடித்து தாகம் தீர்த்து கொண்டதாக தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |